Today Horai in Tamil - இன்றைய சுப ஹோரை
ஹோரைகள்
ஜோதிட சாஸ்திரம் சொல்லும் ராகு கேது நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களும் ஒரு நாளை தங்களுக்குள் ஒவ்வொரு மணி நேரமாக பிரித்து கொண்டு வழி நடத்தும் முறையே ஹோரைகள்
இதில் சுப ஹோரை மற்றும் அசுப ஹோரை என்று இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது இதனை மறுக்க முடியாது என்றாலும் ஏற்றுக்கொள்ளவும் நமக்கு தயக்கமும் உள்ளது காரணம் ஒரு ஹோரை என்பது அந்த கிரகத்தின் காரகத்துவ விஷயங்களில் ஈடுபட உகந்ததே
திங்கள் கிழமை எனில் முதல் ஹோரையாக சந்திரன் ஹோரை வரும் பொதுவாக காலை 6 மணி முதல் 7 மணி வரை என்று கொடுத்திருப்பார்கள் ஆனால் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஏனெனில் ஒரு இடத்தில் சூரியன் உதிக்கும் நேரத்தில் மட்டுமே ஹோரை நேரமும் தொடங்கும் என்பது என்னுடைய கருத்து
உதாரணமாக 6.15 சூரிய உதயம் எனில் 6.15 முதல் 7.15 வரை தான் முதல் ஹோரை இருக்க வேண்டும் அதன் பின்பு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு ஹோரை மாறும்
ஒவ்வொரு ஹோரையிலும் என்னென்ன செய்யலாம் என்று தெரிய கிரக காரகத்துவங்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்
உதாரணமாக
சூரியன்
அரசு வழி காரிங்கள் அரசியல் சம்பந்தப்பட்ட காரியங்கள் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டிய காலம் வணிகம் தொடங்க போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இதுபோன்ற காரியங்களை சூரிய ஹோரையில் செய்ய வேண்டும்
சந்திரன்
போர் போட விவசாய நடவு தொடங்க பால் சம்பந்தப்பட்ட தொழில்கள் தொடங்க கடல் பயணம் செய்ய பூ வியாபாரம் செய்ய உணவு சம்பந்தப்பட்ட தொழில் தொடங்க சந்திர ஹோரை ஏற்றது
புதன்
கல்வி பத்திரம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் இடை தரகு வியாபார நிறுவனம் தொடங்க கலைகளை கற்றுக்கொள்ள புதன் ஹோரை சிறந்தது
செவ்வாய்
இடம் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளுக்கும் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் தொடங்க அறுவை சிகிச்சை செய்ய செவ்வாய் ஹோரை ஏற்றது
குரு
பாட உபதேசம் செய்ய வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் செய்ய ஆன்மிக பணிகள் தொடங்க மற்றும் அனைத்து வித நல்ல காரியங்களுக்கும் குரு ஹோரை சிறந்தது
சுக்கிரன்
பெண் பார்க்க திருமணம் பேசி முடிக்க ஆபரணங்கள் வாங்க கலை நாடகம் நாட்டியம் சம்பந்தப்பட்ட அற்கேற்றம் வாகன விற்பனை தொடங்க அல்லது வாங்க சுக்கிரன் ஹோரை சிறந்தது
சனி
தொழிற்சாலை தொடங்க மக்கள் கூட்டத்தில் பேச அவர்களை ஒன்றிணைக்க கஷ்டப்பட்டு உழைக்கும் எந்தவொரு தொழிலையும் தொடங்க வாகன சர்வீஸ் தொழில் செய்ய ஆயில் கடை பெட்ரோல் பங்கு தொடங்க சனி ஹோரை சிறந்தது
குறிப்பிட்ட செயலுக்கு அந்த கிரகத்தின் ஹோரையில் செய்யுங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்
இந்த ஹோரைகள் தசா புத்தி அமைப்பை விட வலிமை வாய்ந்தாத என்றால் நிச்சயம் இல்லை ஆனால் அவற்றுக்கு பலம் சேர்க்கும் உதாரணமாக ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்கிறோம் புதன் யோகமாக திசை நடத்துகிறார் என்றால் அந்த குழந்தை நல்ல படியாக படித்து வெற்றி பெறுவான் என்று வைத்து கொண்டால் அந்த குழந்தையை புதன் ஹோரையில் பள்ளியில் சேர்த்தால் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவான் அவ்வளவு தான் இந்த ஹோரைகள்
ஹோரை அட்டவணை கீழே கொடுத்துள்ளேன்
0 கருத்துகள்